சேலம் மத்திய சிறையில் சிறைத்துறை இயக்குனர் ஆய்வு

சேலம் மத்திய சிறையில் சிறைத்துறை இயக்குனர் சங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். கைதிகள் அறைகள், நூலகம், மருத்துவமனை, சமையல் கூடம் மற்றும் கைதிகளின் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் சிறைப்பண்பலை நிலையம் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார். மேலும், கைதிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களையும் பெற்றார். இந்த ஆய்வின் போது சிறைத்துறை தலைவர் கனகராஜ், கோவை சரக துணைத்தலைவர் ஜெயபாரதி, சேலம் சிறை சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி