தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உசேன் (36), திருச்சியில் தாய், மகளை பலாத்காரம் செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை சரியில்லாததால் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 9-ஆம் தேதி அங்கிருந்து தப்பினார். தப்பியோடிய அவர் அம்மாபேட்டை பகுதியில் ஒரு வீட்டில் நகை, பணம், மொபட் ஆகியவற்றை திருடியுள்ளார். பின்னர் விருதுநகரில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்து மீண்டும் சேலம் சிறையில் அடைத்தனர். அம்மாபேட்டை போலீசார் திருடிய நகை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.