சேலம்: மத்திய சிறையில் கழிவுநீர் குழாயில் செல்போன் பதுக்கிய கைதி

சேலம் மத்திய சிறையில் நேற்று மாலையில், 5-வது பிளாக்கின் பின்புறம் உள்ள கழிவுநீர் குழாயில் அடைப்பு சரிசெய்யும் பணியின்போது, பிளாஸ்டிக் கவரில் ஒரு செல்போன் மற்றும் பேட்டரி தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டது. சிறை ஊழியர்கள் இதனை சிறை வார்டர்களிடம் ஒப்படைத்தனர். இந்த செல்போனை யார் பதுக்கி வைத்தது, எப்படி கிடைத்தது என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி