அஸ்தம்பட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

சேலம் அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை 25ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகளுக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். இதனால் அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மறவனேரி, மணக்காடு, சின்ன திருப்பதி, ராமநாதபுரம், கன்னங்குறிச்சி, கொண்டப்ப நாயக்கன்பட்டி, ராமகிருஷ்ணா ரோடு, அழகாபுரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், நான்கு ரோடு, மிட்டா பெரிய புதூர், சாரதா காலேஜ் ரோடு, செட்டி சாவடி, விநாயகம்பட்டி, நகர மலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என சேலம் கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி