சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பொங்கல் விழா

சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி வளாகத்தில் சமத்துவ பொங்கலுடன் கொண்டாடப்பட்டது. சேலம் பறை, முரசு இசை குழுவினரின் இசை முழக்கத்துடன் மாணவ- மாணவிகள் நடனமாடி மகிழ்ந்தனர். கல்லூரி தலைவர் சரவணன், மாணவ- மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் கொண்டாடுவதன் மூலம் எதிர்கால தமிழ் சமுதாயம் மேம்படும் என தெரிவித்தார். விழாவில் முதல்வர், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் என பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி