டெல்லியில் குண்டு வெடிப்பு எதிரொலி; சேலத்தில் பாதுகாப்பு தீவிரம்

டெல்லி செங்கோட்டை அருகே நேற்று (நவம்பர் 10) இரவு கார் வெடித்து சிதறியதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சேலம் மாவட்டத்தில், போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவின்பேரில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்கள், பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து சந்தேகத்திற்கிடமான நபர்கள் யாரேனும் இருக்கிறார்களா என கண்காணிக்கின்றனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி