சேலத்தில் கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது

சேலம் களரம்பட்டி மற்றும் சந்தைப்பேட்டை பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் கிச்சிப்பாளையம் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். களரம்பட்டியில் எருமாபாளையத்தை சேர்ந்த வெள்ளையன் (36) என்பவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவும், சந்தைப்பேட்டை அருகே பிரசாந்த் (22) என்பவரிடம் இருந்து 1 கிலோ 400 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி