சேலத்தில் பிளஸ்-2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

சேலம் குகை காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் மகள் சாம்ளி, அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீசார் விரைந்து வந்து சாம்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி