சேலம் பகுதியைச் சேர்ந்த விஜய் (27) என்பவர் சூரமங்கலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பெட்ரோல் நிரப்ப வந்த இரு வாலிபர்கள் அவரிடம் மரியாதை குறைவாகப் பேசியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒரு வாலிபர் விஜய்யை தாக்கிவிட்டுச் சென்றார். மீண்டும் வந்த அந்த வாலிபர்கள், விஜய்யை வெளியே இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கி, கத்தியால் அவரது தலை, முகத்தில் வெட்டியுள்ளனர். இதில் விஜய், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் விஜய்யை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.