அமைச்சர் பதவி மீது ஆசை கிடையாது - சேலம் தவெக எம்எல்ஏ

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி தவெக எம்எல்ஏ விஜய் தமிழன் பார்த்திபன், இன்று தனது தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் கழகத் தலைவர் விஜய் மீது வைத்துள்ள பாசத்தின் அடையாளமாக இந்த வெற்றியை தனக்கு கொடுத்துள்ளனர். மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தருவேன் என்றும், மழைக்காலம் நெருங்கி வருவதால் மழைநீர் தேங்கும் பகுதிகளில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து விரைவில் நடவடிக்கை எடுப்பேன் என்றும் கூறினார். மேலும், தனக்கு அமைச்சர் பதவி மீது என்றுமே ஆசை வந்ததில்லை என்றும், கழகத் தலைவர் முதலமைச்சர் விஜய் என்ன கூறுகிறாரோ அதுதான் தனது வேத வாக்கு என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி