ஓய்வூதியர்கள் ஆயுள் சான்றிதழை தபால் அலுவலகம் மூலம் பெற வசதி

ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதற்காக, தபால் துறையும் தபால் கட்டண வங்கி நிர்வாகமும் இணைந்து சிறப்பு முகாம்களை நடத்துகின்றன. இந்த முகாம்கள் நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் 31-ந்தேதி வரை நடைபெறுகின்றன. இதன் மூலம், ஓய்வூதியதாரர்கள் ஆதார் அடிப்படையிலான சான்றிதழ்களை எந்த தபால் அலுவலகத்திலும் எளிதாகப் பெறலாம். மேலும், தபால்காரர் மூலமாகவும் வீட்டிலிருந்தே சான்றிதழ்களைப் பெறும் வசதியும் உள்ளது. பதிவு செய்யப்பட்டவுடன், ஆயுள் சான்றிதழ் தானாகவே சம்பந்தப்பட்ட அரசு ஓய்வூதிய அமைப்புகளுக்கு அனுப்பப்படும். இந்தத் தகவலை சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி