சேலம்: ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சேலம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களுக்கான மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் அடுத்த மாதம் (ஜூலை) 25ஆம் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதிய பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதியப் பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருந்தால் தங்களது முறையீட்டு மனுக்களை 2 பிரதிகளுடன் அடுத்த மாதம் 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கலெக்டர் அலுவலக முதல் தளம், அறை எண். 123இல் உள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி