சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்த குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, வேலூர் முன்னிலையிலும் நடைபெறவுள்ளது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறையீட்டு மனுக்களை இரண்டு பிரதிகளுடன் அடுத்த மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளம், அறை எண். 123 இல் உள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) அவர்களிடம் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.