அரசு கலைக்கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழக ஆலோசனை கூட்டம்

சேலம் அரசு கலைக்கல்லூரியில் 2025-26-ம் ஆண்டுக்கான பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்கூட்டம் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு முதல்வர் பிரேமலதா தலைமை தாங்கினார். இதில், கங்காதரன் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் திருமுருகன் நிதி நிலை அறிக்கையை வாசித்தார். செயலாளர் அருள், 2025-26-ம் ஆண்டிற்கான செயல் திட்டங்களை வெளியிட்டார். இணைச்செயலாளர் உலகநம்பி கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். துணைத்தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி