ஆனால் அவருக்கு கூறியபடி வங்கி கணக்கில் பணம் எதுவும் திருப்பி அனுப்பவில்லை. இதனால் மோசடி செய்ததை அறிந்த கார்த்திகேயன், இதுபற்றி சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மூலம் முதியவரிடம் பணம் மோசடி செய்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், அஸ்தம்பட்டியை சேர்ந்த 32 வயதான வாலிபர் ஒருவரிடம் டெலிகிராமில் பகுதிநேர வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 67 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.