சேலம் ரயிலில் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய ஒடிசா வாலிபர் கைது

சேலம் ரயில்வே போலீஸ் எஸ்.எஸ்.ஐ பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேலம் வழியாக வந்த ரயில்களில் சோதனை நடத்தினர். விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது, முன்பதிவு இல்லாத பெட்டியில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த ஒடிசாவைச் சேர்ந்த தம்பருஹாரிசன் (35) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவனைக் கைது செய்து விசாரணை நடத்தியதில், ஒடிசாவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி