சேலம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ரவியின் மகள் தீபிகா (18), ஓமலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தார். அடிக்கடி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர், வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.