சேலம்: மூதாட்டியிடம் நூதனமாக நகை பறித்த செவிலியர் கைது

சேலம் காடையாம்பட்டி அடுத்த கே. மோரூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் மதலைமுத்து உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி சேலம் ஐந்து ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அவருக்கு உதவியாக மனைவி பாத்திமா மேரி தங்கி இருந்தார். கடந்த 1ஆம் தேதி பாத்திமா மேரிக்கு பல்வலி ஏற்பட்டு அவதிப்பட்டார். அப்போது பணியில் இருந்த செவிலியர் ரம்யா மூதாட்டியை தனி அறைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது மூதாட்டி தலை முடியை சரி செய்வது போல் அவர் அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி அதை மறைத்து வைத்து விட்டார். 

சிறிது நேரத்தில் சங்கிலி இல்லாததை உணர்ந்த பாத்திமா மேரி மருத்துவமனை நிர்வாகம் மூலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன் மதிப்பு ரூபாய் 1.50 லட்சம் ஆகும். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ரம்யாவை நேற்று (மார்ச்.17) கைது செய்து நகையை மீட்டனர்.

தொடர்புடைய செய்தி