சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே தவெக சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிராஜ் (37) என்பவர், கூட்டத்தில் நீண்ட நேரம் வெயிலில் நின்றதால் திடீரென மயக்கமடைந்துள்ளார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை பார்த்து அவர் மனைவி கதறி அழுதார்.சிராஜ் 20 வருடங்களுக்கு முன்பு சேலம் வந்து, சில வருடங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.