சேலம் காரிப்பட்டியை அடுத்த பெரிய கவுண்டபுரம் பகுதியைச் சேர்ந்த சோலைக்கனி, திருமணமான 25 நாட்களிலேயே வீட்டில் இருந்து வெளியே சென்று திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது கணவர் சிவசக்தி காரிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மாயமான சோலைக்கனி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.