சேலம்: சீமான் கைது கண்டித்து நாம்தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். 

சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் இமய ஈஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி