சேலத்தில் பெண்ணிடம் நகை பறித்த மர்ம நபர்கள்

சேலம் சூரமங்கலம் அருகே ஜாகீர் அம்மாபாளையம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த லாவண்யா (48) என்பவர் வியாழன் மாலை விஜயராகவன் 4-வது கிராஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது டூவீலரில் வந்த இருவரில் ஒருவர், லாவண்யாவின் கழுத்தில் இருந்த 12 பவுன் தாலிக்கொடியில் 4 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸில் லாவண்யா அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி