இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது: -
இசைக்கருவிகள் சிறப்பு வாய்ந்த இசைக் கலைஞர்களின் புகைப்படங்களும், கண்காட்சியின் முக்கிய அம்சமாக இசை இலக்கண, செயல்முறை சார்ந்த அம்சங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குரலிசை, பரதம், நாதசுரம் மற்றும் தவில் இசைக்கலைஞர்களின் சிறப்புகள் மற்றும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் வகையில் கண்காட்சி இடம் பெற்றுள்ளது.
அடுத்த தலைமுறை செவ்வியல் இசை, பரதநாட்டியம் மற்றும் தொன்மை மிகுந்த நாட்டுப்புறக்கலை, இந்துஸ்தானி இசை ஆகியவற்றின் சிறப்பை வெளிப்படுத்தும் விதமாக பாரம்பரிய இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டு செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. என்று கூறினார்.