சேலத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த திருவாரூர் மாவட்ட ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் செங்கொடி, கொரடாச்சேரி தெற்கு ஒன்றியச் செயலாளர் பூபதி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கட்சித் துண்டு அணிவித்து வரவேற்றார்.