பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த 22 வயது அமான் தாகூர், வேலை தேடி சேலம் வந்தார். நெத்திமேட்டில் வேலை இருப்பதாகக் கூறி அவரை அழைத்த மர்மநபர், வேலைக்குச் செல்ல விருப்பமில்லை என்று அமான் தாகூர் கூறியதால் தகராறில் ஈடுபட்டு, அவரிடம் இருந்த ரூ.11 ஆயிரம் ரொக்கத்தையும் செல்போனையும் பறித்துச் சென்றார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.