சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிரதீபா, கடந்த 25ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பாததால், பெற்றோர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமியைத் தேடி வந்த நிலையில், நேற்று சீராகப்பாடியில் உள்ள குட்டையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆட்டையாம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.