மராட்டிய மாநிலம் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான நர்சிங் மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியில் சேலம் எஸ்.கே.எஸ். நர்சிங் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய அளவிலான கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் அழைத்து பாராட்டி, கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துகள் தெரிவித்தார்.