சேலம் மற்றும் மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களை ஊரகப்பகுதி கிராமங்களுடன் இணைத்திடும் பகுதியில் 39 வழித்தடங்களில் மினி பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த மினி பேருந்து சேவைகள் மூலமாக சேலம் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நகரப் பகுதிகளுடன் இணைக்கப்பட உள்ளன. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே இன்று காலை நடந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்துகொண்டு மினி பேருந்தின் உரிமையாளர்களுக்கு வழித்தட சான்றிதழை வழங்கினார்.
பிறகு அவர் சேலம் மாவட்டத்தில் மினி பேருந்து சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். சிவலிங்கம், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.