நாமக்கல் அருகே ரயில் சென்றபோது கணவன்-மனைவி 2 பேரும் சாப்பிட்டனர். பின்னர் கைகழுவுவதற்காக தமிழரசன் எழுந்து வாயில் பகுதிக்குச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனிடையே கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்டதால் கணவர் வரவில்லை என்று கலைசெல்வி நினைத்துக்கொண்டார்.
ரயில் ராமேசுவரம் சென்றதும் கணவரைக் காணாததால் இதுகுறித்து அவர் அங்கிருந்த ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுத்தார். பின்னர் அவர்கள் சேலம் ரயில்வே போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே நாமக்கல் அருகே உள்ள களங்காணி ரயில் நிலையம் பகுதியில் தமிழரசன் ரயிலில் அடிபட்டு இறந்துகிடந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசார் விரைந்துசென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.