சேலம்: உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி மாரத்தான் போட்டி

சேலம் தனியார் மருத்துவமனை மற்றும் இந்தியன் பெண்கள் நெட்வொர்க் அமைப்பு இணைந்து உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. 

இதில் 5, 10, 25 கிலோமீட்டர் என தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் குழந்தைகள், பெண்கள், பொதுமக்கள் என 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களின் உடல் நலனை பேணிக் காத்திட வேண்டும். அவர்களின் உடல் வலிமையும் எலும்பு தேய்மானத்தையும் பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடைபெற்றது. 

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டி வின்சென்ட், அஸ்தம்பட்டி, கோரிமேடு, ஏற்காடு அடிவாரம் வரை சென்று மீண்டும் மகாத்மா காந்தி மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி