சேலம்: பிளஸ்-2 மாணவிக்கு இன்ஸ்டாவில் தொல்லை

சேலம் சூரமங்கலம் அருகே காசக்காரனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (37) என்பவர், பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி