அந்த மனுவில் அவர் கூறியிருந்தாவது: -
சேலம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த நித்தியானந்தம் (வயது 45) என்பவர் அறிமுகமானார். பின்னர் அவர் அரசு அதிகாரிகள் பலர் தெரியும். எனவே பணம் கொடுத்தால், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார். இதை நம்பி பல தவணைகளில் ரூ. 22 லட்சம் கொடுத்தேன். ஆனால் அரசு வேலை கிடைக்கவில்லை. அவரிடம் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டேன். ஆனால் அவர் பணம் தரவில்லை. சில மாதங்களில் தலைமறைவாகி விட்டார். எனவே அவரை கண்டுபிடித்து மோசடி செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு முனியசாமி தலைமையில் தனிப்படையினர் நித்தியானந்தத்தை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஈரோட்டில் தலைமறைவாக இருந்த நித்தியானந்தத்தை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ. 3½ கோடி மோசடி செய்திருப்பது தெரிந்தது. இதையடுத்து நித்தியானந்தத்தை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.