சேலம் அரியானூரில், இளம்பெண்ணை பார்க்க வந்த ஈரோடு அந்தியூரைச் சேர்ந்த மருத்துவர் நித்திஷ் (27) மற்றும் திண்டுக்கல் பழனியைச் சேர்ந்த மருத்துவர் மோகன் (29) ஆகியோர், பாரப்பட்டியைச் சேர்ந்த ஹரிஹரன் (27) உள்ளிட்ட 3 பேரின் தாக்குதலுக்கு உள்ளாகினர். தனியார் கல்லூரியில் பணியாற்றி வரும் இவர்கள், இளம்பெண் மற்றும் அவரது தோழியை ஏற்காட்டிற்கு அழைத்துச் செல்ல காத்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஹரிஹரன் கைது செய்யப்பட்டுள்ளார்.