பராமரிப்பு பணி: சேலம்வழியாக செல்லும் 2ரெயில் சேவையில் மாற்றம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள பெருந்துறை யார்டு பகுதியில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, எர்ணாகுளம்-டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்-18190) நாளை (சனிக்கிழமை) வாஞ்சிபாளையம் ரயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் தாமதமாகவும், ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்-13352) திருப்பூர் ரயில் நிலையத்தில் 30 நிமிடங்கள் தாமதமாகவும் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த தகவலை சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி