மகா சிவராத்திரியையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் சிறப்பு பூஜை தொடங்கி, சிவனுக்கு பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 8 மணிக்கு முதல் கால பூஜை தொடங்கி, நள்ளிரவு 12 மணிக்கு 2-ம் கால பூஜை, இரவு 2 மணிக்கு 3-ம் கால பூஜை, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை 4-ம் கால பூஜையும் நடைபெற்றது. சிவராத்திரியையொட்டி சுகவனேசுவரர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.