மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து சதுப்பு நிலங்களை பாதுகாத்தல், பாலப்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து நீர்நிலைகளை பாதுகாக்கவும், அவற்றை மேம்படுத்தும் பணிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் செல்வம், ராஜா, வில்சன், சசிகலா, அய்யனார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலாளர் சங்கர் நன்றி கூறினார். பின்னர் அருள் எம்.எல்.ஏ.விடம், அங்கன்வாடி மையத்தில் கழிப்பறை 2 மாதங்களாக மூடப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர். உடனே அதனை பார்வையிட்ட அருள் எம்.எல்.ஏ., வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறி கழிப்பறையை சீரமைக்க ரூ. 5 லட்சம் நிதி பெற்றுக் கொடுத்தார்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,600 கிடுகிடு உயர்வு