சேலம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; 130 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநகர மாவட்ட துணை செயலாளர் காயத்திரி தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களையும், கட்சியின் தலைவர் திருமாவளவன் படத்தை சேதப்படுத்தியவர்களையும் உடனடியாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் காவலில் வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி