சேலம் நீதிமன்றத்தில் மின் தாக்கல் முறையை கட்டாயமாக்குவதை எதிர்த்து வழக்கறிஞர்கள் இன்று முதல் வருகிற 6ஆம் தேதி வரை நீதிமன்றத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்படும் இந்த புதிய மின் தாக்கல் முறையால் வழக்கறிஞர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும் எனக்கூறி, இந்த முறையை கைவிட வலியுறுத்தி சங்க பொதுக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.