சேலம் கிச்சிப்பாளையம் அருகே எருமாபாளையத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரவி (50), தேசிய நெடுஞ்சாலையில் டூ வீலரில் சென்றபோது வேனில் மோதி படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.