சேலம்: கருணாநிதி பிறந்தநாள் விழா; திமுக சார்பில் மரியாதை

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளையொட்டி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நான்கு ரோடு அண்ணா பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு, சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, திமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், மாநகராட்சி மேயர் ஆ. ராமச்சந்திரன், மாநகர அவைத் தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகர செயலாளர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். தொண்டர்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி