அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், ஜல்லிக்கட்டு விழாக்குழுவுக்கு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, காயமடைந்தால் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காளைகள் மற்றும் வீரர்களுக்கு அரசு சார்பில் காப்பீடு செய்யப்படும் என்றும், ஆன்லைன் டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு விழாக்குழுவினரே ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். இதற்கு ஜல்லிக்கட்டு வீரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.