இது தொடர்பாக வருகிற 30-ந் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம், சேலம் மாநகர போலீசாருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து புகார் தெரிவித்த மாணவர்களிடம் விசாரணை நடத்தும் வகையில் 12 மாணவர்களுக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை 11 மணியளவில் புகார் தெரிவித்த 10 மாணவர்கள், சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அவர்களிடம் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி