சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, கோவையில் இருந்து சேலம் வழியாக ஜோலார்பேட்டை வரை நாளை (வியாழக்கிழமை) அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறும். ஜோலார்பேட்டை - கோவை இடையேயான ரெயில் பாதையை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும் பணிகள் நடைபெற்று வருவதால், ரெயில்களை வேகமாக இயக்க இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. நாளை காலை 8 மணிக்கு கோவையில் இருந்து தொடங்கும் இந்த சோதனை ஓட்டத்தின்போது, ரெயில் பாதைகளுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில் பாதைகளை கடக்கவோ, நெருங்கவோ அல்லது அத்துமீறி நுழையவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.