தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நாளை திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 13 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி