சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலை கல்லூரியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடற்கல்வித்துறை சார்பில் நேற்று கல்லூரியின் வளாகத்தில் பெண்களுக்கான கைப்பந்து போட்டி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் காந்திமதி போட்டியை தொடங்கி வைத்தார். மாவட்ட அளவில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்த போட்டியில் 10-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. ஏராளமான மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.