சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து முடித்த 122 மாணவ, மாணவிகளுக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி பட்டமளிப்பு விழா போன்று பள்ளி வளாகம் வாழை மரங்கள், பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஊரக வட்டார கல்வி அலுவலர் தங்கதுரை கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சி தொடக்கக் கல்வியை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்தது.