அப்போது கந்தம்பட்டியில் ரோட்டை கடக்கும் போது திருச்சியில் இருந்து சேலம் வந்த கும்பகோணம் கோட்டத்தை சேர்ந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. இதில் அவருக்கு இடது கை உடைந்தது. இது சம்பந்தமாக சேலம் சி.ஜே.எம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. நீதிபதி ஜெயகுமார் 24.9.21 அன்று அவருக்கு இழப்பீடு தொகையாக ரூ.1.19 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதுவரை இழப்பீடு தொகை வழங்காததால் வக்கீல் செந்தில்குமார் அரசு பேருந்தை ஜப்தி செய்ய மனு செய்தார்.
அதன்படி நீதிமன்ற அமினாக்கள் சுமதி, இந்திரா மற்றும் வக்கீல் செந்தில்குமார் மற்றும் பாதிக்கப்பட்ட கார்த்தி ஆகியோர் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ்ஸை ஜப்தி செய்தனர்.