சேலம் அருகே வீராணம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சிலரை போலீசார் கைது செய்தனர். இதில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மேட்டாங்காடு மங்கலம் பகுதியை சேர்ந்த தினேஷ் (வயது 22) என்பவர் தப்பி ஓடி தலைமறைவானார். திருச்செங்கோடு பகுதியில் பதுங்கி இருந்த தினேசை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.