சேலம் கஞ்சா விற்ற வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம்

சேலம் தாதகாப்பட்டி, குகை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28), சாரதி (23), ஜீவானந்தம் (21) ஆகியோர் கடந்த மாதம் கஞ்சா விற்றபோது கிச்சிப்பாளையம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்திக் மீது ஏற்கனவே 3 வழக்குகள் உள்ளதும், கார்த்திக், சாரதி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைதானதும் விசாரணையில் தெரியவந்தது. பொது ஒழுங்கு பாதிக்கும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் துணை கமிஷனர் பரிந்துரைத்தார். இதை ஏற்று, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி நேற்று உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள அவர்களிடம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி