சேலம் மத்திய சிறை வார்டன்கள் அதிரடி மாற்றம்

சேலம் மத்திய சிறையில் பணியாற்றி வரும் சீப் ஹெட் வார்டன்கள் சித்திரைச் செல்வன், முருகேசன், இரண்டாம் நிலை காவலர் சேட்டு, பெண்கள் கிளை சிறையில் பணியாற்றி வந்த வார்டன் பவித்ரா ஆகியோர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சித்திரைச் செல்வன், முருகேசன் ஆகியோர் புழல் சிறைக்கும், சேட்டு பாளையங்கோட்டைக்கும், பவித்ரா புகழ் சிறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். கைதிகளுடன் தொடர்பு வைத்திருந்தது, சிறையில் உள்ள பேக்கரியில் கையாடல் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் நிர்வாக காரணங்களுக்காக அவர்கள் மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி